நியாயாதிபதிகள் 16:25
இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாக இருக்கும்போது: நமக்கு முன்பாக வேடிக்கை காட்டுவதற்கு, சிம்சோனை அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றார்கள்; அப்பொழுது சிம்சோனைச் சிறைச்சாலையிலிருந்து அழைத்துக்கொண்டு வந்தார்கள், அவர்களுக்கு முன்பாக வேடிக்கைக் காட்டினான்; அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Judges 9:27வெளியே புறப்பட்டு, தங்கள் திராட்சை தோட்டங்களின் பழங்களை அறுத்து, ஆலையில் ஆட்டி, ஆடிப்பாடி, தங்கள் தேவனின் வீட்டிற்குள் போய், சாப்பிட்டுக்குடித்து, அபிமெலேக்கை சபித்தார்கள்.
Judges 19:6அவர்கள் உட்கார்ந்து, இருவரும் சாப்பிட்டுக் குடித்தார்கள்; பெண்ணின் தகப்பன் அந்த மனிதனைப் பார்த்து: நீ தயவுசெய்து, உன்னுடைய இருதயம் மகிழ்ச்சியடைய இரவும் இரு என்றான்.
2 Samuel 13:28அப்சலோம் தன்னுடைய வேலைக்காரர்களை நோக்கி: அம்னோன் திராட்சைரசம் குடித்து சந்தோஷமாக இருக்கும் நேரத்தை நன்றாக எதிர்பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன்; உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாக இருங்கள் என்று சொல்லியிருந்தான்.
Esther 3:15அந்த தபால்காரர்கள் ராஜாவின் உத்திரவினால் விரைவாகப் புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரண்மனையில் பிறந்தது. ராஜாவும் ஆமானும் குடிக்கும்படி உட்கார்ந்தார்கள்; சூசான் நகரம் கலங்கியது.
Psalms 35:15ஆனாலும் எனக்கு ஆபத்து உண்டானபோது 1 அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; 1 அற்பமானவர்களும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாகக் கூட்டம் கூடி, 1 ஓயாமல் என்னை இகழ்ந்தார்கள். 1
Psalms 69:26தேவனே நீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, 1 நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே. 1