நியாயாதிபதிகள் 9:56
இப்படியே அபிமெலேக்கு தன்னுடைய 70 சகோதரர்களைக் கொலை செய்ததால், தன்னுடைய தகப்பனுக்குச் செய்த தீங்கை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Judges 9:24யெருபாகாலின் 70 மகன்களுக்குச் செய்யப்பட்ட கொடுமை வந்து பலித்தது, அவர்களுடைய இரத்தப்பழி அவர்களைக் கொன்ற அவர்களுடைய சகோதரனான அபிமெலேக்கின்மேலும், தன்னுடைய சகோதரர்களைக் கொல்ல அவனுடைய கைகளை பெலப்படுத்தின சீகேம் மனிதர்கள் மேலும் சுமரும்படியாகச் சீகேமின் பெரிய மனிதர்கள் அபிமெலேக்குக்கு துரோகம் செய்தார்கள்.
Psalms 9:12ஏனெனில் இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, 1 அவர்களை நினைக்கிறார்; 1 எளியவர்களுடைய கூக்குரலை மறக்கமாட்டார். 1
Psalms 58:10பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; 1 அவன் தன்னுடைய பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான். 1
Proverbs 5:22துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; 1 தன்னுடைய பாவக்கயிறுகளால் கட்டப்படுவான். 1
Acts 28:4விரியன்பாம்பு அவன் கையிலே தொங்குகிறதை அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் கண்டபோது, இந்த மனிதன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் கடலிலிருந்து தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்க விடவில்லை என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
Revelation 19:20அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள்.