The Bible Software
bible.softwareலேவியராகமம்லேவியராகமம் 23 › லேவியராகமம் 23:40

லேவியராகமம் 23:40

முதல் நாளிலே அலங்காரமான மரங்களின் பழங்களையும் பேரீச்சை மரங்களின் ஓலைகளையும் தழைத்திருக்கிற மரங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் ஏழுநாட்களும் மகிழ்ச்சியாக இருங்கள்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And ye shall take you on the first day the boughs of goodly trees, branches of palm trees, and the boughs of thick trees, and willows of the brook; and ye shall rejoice before the LORD your God seven days.

In Context

39“நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்து வைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாம்தேதிமுதல் யெகோவாவுக்குப் பண்டிகையை ஏழுநாட்கள் அனுசரிப்பீர்களாக; முதலாம் நாளிலும் ஓய்வு; எட்டாம் நாளிலும் ஓய்வு.

41வருடந்தோறும் ஏழுநாட்கள் யெகோவாவுக்கு இந்தப் பண்டிகையை அனுசரிப்பீர்களாக; இது உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை; ஏழாம் மாதத்தில் அதை அனுசரிக்கவேண்டும்.

Read all of லேவியராகமம் 23

Cross References

Deuteronomy 12:12உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் நீங்களும், உங்களுடைய மகன்களும், மகள்களும், வேலைக்காரர்களும், வேலைக்காரிகளும், உங்களுடன் பங்கும் சொத்தும் இல்லாமல் உங்களுடைய வாசல்களில் இருக்கிற லேவியனும் சந்தோஷப்படுவீர்களாக.

Nehemiah 8:14அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே + 8:14 பார்க்க லேவி. 23:33-36, 39-43; உபா 16:13-15, இஸ்ரவேல் மக்கள் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்க வேண்டும் என்று யெகோவா மோசேயைக்கொண்டு கற்றுக்கொடுத்த காரியம் எழுதியிருக்கிறதைக் கண்டார்கள்.

Isaiah 35:10யெகோவாவால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.

Matthew 21:8திரளான மக்கள் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி வழியிலே பரப்பினார்கள்.

John 16:22அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்து இருக்கிறீர்கள். நான் மீண்டும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்களுடைய இருதயம் சந்தோஷப்படும், உங்களுடைய சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடமிருந்து எடுத்துப்போடுவதில்லை.

Philippians 3:3ஏனென்றால், சரீரத்தின்மேல் நம்பிக்கையாக இல்லாமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவிற்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study லேவியராகமம் 23:40

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← லேவியராகமம் 23:39லேவியராகமம் 23லேவியராகமம் 23:41 →