Mark 12:19
போதகரே, ஒருவனுடைய சகோதரன் வாரிசு இல்லாமல் தன் மனைவியைவிட்டு மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்காக வாரிசை உண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
18உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அவரிடம் வந்து:
Cross References
Deuteronomy 25:5“சகோதரர்கள் ஒன்றாகக் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் வாரிசு இல்லாமல் இறந்தால், இறந்தவனுடைய மனைவி வெளியிலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக்கூடாது; அவளுடைய கணவனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, கணவனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்.
Ruth 4:5அப்பொழுது போவாஸ்: நீர் நகோமியின் கையிலே அந்த வயல்நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவனுடைய பெயரை நிலைநிற்கச்செய்யும்படிக்கு, மரித்தவனுடைய மனைவியாகிய மோவாபியப் பெண்ணாகிய ரூத்தைத் திருமணம் செய்யவேண்டும் என்றான்.