Matthew 18:12
உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று காணாமற்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப்போய் காணாமற்போனதைத் தேடாமலிருப்பானோ?
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
11மனிதகுமாரன் இழந்துபோனதை இரட்சிக்க வந்தார்.
Cross References
1 Kings 21:17யெகோவாவுடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டானது, அவர்:
Isaiah 53:6நாம் எல்லோரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; யெகோவாவோ நம் அனைவருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழச்செய்தார்.
Ezekiel 34:6என்னுடைய ஆடுகள் எல்லா மலைகளிலும் உயரமான எல்லா மேடுகளிலும் அலைந்து, பூமியின்மீதெங்கும் என்னுடைய ஆடுகள் சிதறித் திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை.
Ezekiel 34:16நான் காணாமல்போனதைத் தேடி, துரத்தப்பட்டதைத் திரும்பக் கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, வலிமை இல்லாததைத் திடப்படுத்துவேன்; நியாயத்திற்குத்தக்கதாக அவைகளை மேய்த்து, கொழுத்ததும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன்.
Matthew 12:11அதற்கு அவர்: உங்களில் எந்த மனிதனுக்காவது ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ?
Matthew 22:42கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.