Matthew 21:44
இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Psalms 2:9இரும்புக் கோலால் அவர்களை நொறுக்கி, 1 குயவனின் மண்பாண்டத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார். 1
Psalms 21:8உமது கை உமது எதிரிகள் எல்லோரையும் எட்டிப்பிடிக்கும்; 1 உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும். 1
Isaiah 8:14அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் யூதா, இஸ்ரவேல், இரண்டு கோத்திரத்திற்கும் தடுக்கி விழச்செய்யும் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிமக்களுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.
Daniel 2:34நீர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது.
Zechariah 12:3அந்நாளிலே நான் எருசலேமை சகல மக்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதை அசைக்கிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள தேசங்களெல்லாம் அதற்கு விரோதமாகக் கூடிக்கொள்வார்கள்.
Matthew 27:25அதற்கு மக்களெல்லோரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்களுடைய பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.