Micah 6:5
என் மக்களே, மோவாபின் ராஜாவாகிய பாலாக் செய்த யோசனை இன்னதென்றும், பேயோரின் மகனாகிய பிலேயாம் அவனுக்கு மறுமொழியாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் + 6:5 இஸ்ரவேலின் கடைசி பாளையும் யோர்தான் நதியின் கிழக்கு பகுதியில் இறங்கினார்கள். யோசுவா 3:1, யோர்தானை கடந்து மேற்கு பகுதியில் முதன்முறையாக கானான் தேசத்தில் கில்கால் என்ற இடத்தில் பாளையம் இறங்கினார்கள் யோசுவா 4:19, இதன் மத்தியில் நடந்த அற்புத காரியம் என்னவென்றால் இஸ்ரவேலர்கள் யோர்தான் நதியை கால் நடையாக கடந்தார்கள். தொடங்கி கில்கால்வரை நடந்தது இன்னதென்றும், நீ யெகோவாவுடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Numbers 22:41மறுநாள் காலையில் பாலாக் பிலேயாமைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பாகாலுடைய மேடுகளில் + 22:41 பமோத்-பால் ஏறச்செய்தான்; அந்த இடத்திலிருந்து பிலேயாம் ஜனத்தின் கடைசி முகாமைப் பார்த்தான்.
Numbers 23:27அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: “வாரும், வேறொரு இடத்திற்கு உம்மை அழைத்துக்கொண்டு போகிறேன்; நீர் அங்கே இருந்தாவது எனக்காக அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாக இருக்கும்” என்று சொல்லி,
Numbers 25:2அவர்கள் தங்களுடைய தெய்வங்களுக்கு செலுத்திய பலிகளை விருந்துண்ணும்படி மக்களை அழைத்தார்கள்; மக்கள் போய் சாப்பிட்டு, அவர்கள் தெய்வங்களைப் பணிந்துகொண்டார்கள்.
Numbers 31:16பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் மக்கள் யெகோவாவுக்கு விரோதமாகத் துரோகம்செய்யக் காரணமாக இருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் யெகோவாவின் சபையிலே வாதையும் நேரிட்டதே.
Deuteronomy 8:2உன் தேவனாகிய யெகோவா உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருடங்களும் வனாந்திரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக.
Deuteronomy 9:7நீ வனாந்திரத்தில் உன் தேவனாகிய யெகோவாவுக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதை நினைத்துக்கொள், அதை மறக்காதே; நீங்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள்முதல், இந்த இடத்திற்கு வந்துசேரும்வரை, யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம்செய்தீர்கள்.