நெகேமியா 3:15
ஊற்றுவாசலை மிஸ்பாவின் மாகாணத்தை ஆட்சி செய்யும் கொல்லோசேயின் மகன் சல்லூம் பழுதுபார்த்து, அதைக் கட்டி, கூரையமைத்து, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, ராஜாவின் தோட்டத்தின் அருகிலிருக்கிற சீலோவாவின் குளத்து மதிலையும், தாவீதின் நகரத்திலிருந்து இறங்குகிற படிகள்வரை இருக்கிறதையும் கட்டினான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Judges 20:1அப்பொழுது தாண்முதல் பெயெர்செபா வரையுள்ள இஸ்ரவேல் மக்கள் அனைவரும் கீலேயாத் தேசத்தார்களோடு மிஸ்பாவிலே யெகோவாவுக்கு முன்பாக ஒருமித்து சபையாகக் கூடினார்கள்.
2 Samuel 5:6தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்கள்மேல் யுத்தம்செய்ய ராஜா தன்னுடைய மனிதர்களோடு எருசலேமுக்குப் போனான். அவர்கள்: இதிலே தாவீதால் நுழையமுடியாது என்று நினைத்து, தாவீதை நோக்கி: நீ இதற்குள் நுழையமுடியாது; குருடர்களும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள்.
2 Samuel 5:9அந்தக் கோட்டையிலே தாவீது வாழ்ந்து, அதற்குத் தாவீதின் நகரம் என்று பெயரிட்டு, மில்லோ என்னும் இடம் துவங்கி, உட்புறம்வரை சுற்றிலும் மதிலைக் கட்டினான்.
2 Chronicles 32:30இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதன் தண்ணீரை மேற்கேயிருந்து கீழே தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது.
Nehemiah 3:7அவர்கள் அருகே கிபியோன் மிஸ்பா ஊர்களின் மனிதர்களின் மெலதீயா என்னும் கிபியோனியனும், யாதோன் என்னும் மெரோனோத்தியனும், நதிக்கு மறுபுறத்திலிருக்கிற அதிபதியின் மாகாணம்வரை பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
Nehemiah 3:12அவன் அருகே எருசலேம் பட்டணத்தின் மறுபாதியை ஆட்சி செய்யும் அல்லோகேசின் மகன் சல்லூமும், அவனுடைய மகள்களும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.