Numbers 11:17
அப்பொழுது நான் இறங்கிவந்து, அங்கே உன்னோடு பேசி, நீ ஒருவன் மட்டும் மக்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடு அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Genesis 17:3அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனுடன் பேசி:
Genesis 18:20பின்பு யெகோவா “சோதோம் கொமோராவைக்குறித்து ஏற்படும் கூக்குரல் பெரிதாக இருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடியதாக இருப்பதினாலும்,
Exodus 18:22அவர்கள் எப்பொழுதும் மக்களை நியாயம் விசாரித்து, பெரிய காரியங்கள் எல்லாவற்றையும் உம்மிடம் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடு இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாக இருக்கும்.
Exodus 19:20யெகோவா சீனாய்மலையிலுள்ள உச்சியில் இறங்கினபோது, யெகோவா மோசேயை மலையின் உச்சியில் வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.
Numbers 7:89மோசே தேவனோடு பேசும்படி ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போது, தன்னோடே பேசுகிறவர்களின் சத்தம் சாட்சிப்பெட்டியின்மேலுள்ள கிருபாசனமான இரண்டு கேருபீன்களின் + 7:89 ஆதி 3. அதிகாரத்தில் ஜீவ விருட்சத்தை பாதுகாக்க இருந்தது போல தெய்வீக பொருட்களை பாதுகாக்க இங்கு இருந்தன. நடுவிலிருந்து உண்டாகக் கேட்பான்; அங்கே இருந்து அவனோடு பேசுவார்.
Numbers 12:5யெகோவா மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார்; அவர்கள் இருவரும் போனார்கள்.