Numbers 12:2
“யெகோவா மோசேயைக்கொண்டுமட்டும் பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். யெகோவா அதைக் கேட்டார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
3மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதர்களிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாக இருந்தான்.
Cross References
Genesis 29:33மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: “நான் அற்பமாக எண்ணப்பட்டதைக் யெகோவா கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தார்” என்று சொல்லி, அவனுக்கு சிமியோன் என்று பெயரிட்டாள்.
Exodus 4:30யெகோவா மோசேக்குச் சொல்லிய எல்லா வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, மக்களின் கண்களுக்கு முன்பாக அந்த அடையாளங்களையும் செய்தான்.
Exodus 7:10மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், யெகோவா தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவனுடைய வேலைக்காரர்களுக்கு முன்பாகவும் தன்னுடைய கோலைப் போட்டான், அது பாம்பானது.
Numbers 11:1பின்பு, இஸ்ரவேல் மக்கள் முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அது யெகோவாவுடைய செவிகளில் தீமையாக இருந்தது; யெகோவா அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது; யெகோவாவுடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, முகாமின் கடைசியிலிருந்த சிலரை எரித்தது.
Numbers 16:3மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டம்கூடி, அவர்களை நோக்கி: “நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லோரும் பரிசுத்தமானவர்கள்; யெகோவா அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, யெகோவாவுடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்” என்றார்கள்.
2 Kings 19:4ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி அசீரியா ராஜாவாகிய தன் எஜமானால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளையெல்லாம் உமது தேவனாகிய யெகோவா கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய யெகோவா கேட்டிருக்கிற வார்த்தைகளுக்காக தண்டனை செய்வார்; ஆகையால் இன்னும் மீதியாக இருக்கிறவர்களுக்காக விண்ணப்பம்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.