Numbers 14:40
அதிகாலையில் அவர்கள் எழுந்து: “நாங்கள் பாவம்செய்தோம், யெகோவா வாக்குத்தத்தம்செய்த இடத்திற்கு நாங்கள் போவோம்” என்று சொல்லி மலையின் உச்சியில் ஏறத்துணிந்தார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
39மோசே இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொன்னபோது, மக்கள் மிகவும் துக்கித்தார்கள்.
41மோசே அவர்களை நோக்கி: “நீங்கள் இப்படி யெகோவாவின் கட்டளையை மீறுகிறதென்ன? அது உங்களுக்கு வாய்க்காது.
Cross References
Deuteronomy 1:41அப்பொழுது நீங்கள் எனக்கு மறுமொழியாக: “யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தோம்; நம்முடைய தேவனாகிய யெகோவா எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் போர் செய்வோம் என்று சொல்லி, நீங்கள் யாவரும் உங்களுடைய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, மலையின்மேல் ஏற ஆயத்தமாயிருந்தீர்கள்.
Matthew 7:21பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் விருப்பத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னைப் பார்த்து: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
Luke 13:25வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் மறுமொழியாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.