Numbers 16:14
மேலும் நீ எங்களைப் நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்திற்குக் கொண்டுவந்ததும் இல்லை, எங்களுக்கு வயல்களையும் திராட்சைத்தோட்டங்களையும் சுதந்தரமாகக் கொடுத்ததும் இல்லை; இந்த மனிதர்களுடைய கண்களைப் பிடுங்கப்பார்க்கிறாயோ? + 16:14 இந்த ஜனங்களை வஞ்சிக்க பார்க்கிறாயோ நாங்கள் வருகிறதில்லை” என்றார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Exodus 3:8அவர்களை எகிப்தியர்களின் கைகளுக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்த தேசத்திலிருந்து நீக்கி, கானானியர்களும், ஏத்தியர்களும், எமோரியர்களும், பெரிசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும் இருக்கிற இடமாகிய செழிப்பான நலமும் விசாலமுமான தேசத்தில் + 3:8 நல்ல விளைச்சல் உள்ள தேசம் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.
Exodus 22:5“ஒருவன் மற்றவனுடைய வயலிலோ திராட்சைத்தோட்டத்திலோ தன்னுடைய மிருகஜீவனை மேயவிட்டால், அவன் தன்னுடைய சொந்தவயலிலும் திராட்சைத்தோட்டத்திலும் உள்ள பலனில் சிறந்ததை எடுத்து, பதிலுக்குக் கொடுக்கவேண்டும்.
Leviticus 20:24“நீங்கள் அவர்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள் என்று உங்களுடன் சொன்னேன்; பாலும் தேனும் ஒடுகிற + 20:24 செழிப்பான தேசம்அந்த தேசத்தை உங்களுக்குச் சொந்தமாகக் கொடுப்பேன்; உங்களை மற்ற மக்களைவிட்டுப் பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய யெகோவா நானே.
Numbers 20:5விதைப்பும், அத்திமரமும், திராட்சைச்செடியும், மாதுளஞ்செடியும், குடிக்கத்தண்ணீரும் இல்லாத இந்தக் கெட்ட இடத்தில் எங்களைக் கொண்டுவரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்தது ஏன்” என்றார்கள்.
Judges 16:21பெலிஸ்தர்கள் அவனைப் பிடித்து, அவனுடைய கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைக்க வைத்தார்கள்.