Numbers 18:5
இஸ்ரவேல் மக்கள்மேல் இனிக் கடுங்கோபம் வராதபடி, நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் பலிபீடத்தின் காவலையும் காக்கவேண்டும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Exodus 30:7ஆரோன் காலைதோறும் அதின்மேல் நறுமண தூபம்காட்டவேண்டும்; மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபம்காட்டவேண்டும்; விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபம்காட்டவேண்டும்.
Leviticus 24:3ஆசரிப்புக்கூடாரத்தில் மகா பரிசுத்த ஸ்தலத்தின் + 24:3 உடன்படிக்கைப்பெட்டி திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் அதை எப்பொழுதும் மாலைதொடங்கி விடியற்காலம்வரை யெகோவாவுடைய சந்நிதியில் எரியும்படி ஏற்றுவானாக; இது உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை.
Numbers 4:18“லேவியர்களுக்குள்ளே கோகாத் வம்சமாகிய கோத்திரத்தார் அழிந்துபோகாதபடி பாருங்கள்.
Numbers 8:19லேவியர்கள் இஸ்ரவேல் மக்களுடைய பணிவிடையை ஆசரிப்புக்கூடாரத்தில் செய்யும்படியும், இஸ்ரவேல் மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படியும், இஸ்ரவேல் மக்கள் தாங்களே பரிசுத்த ஸ்தலத்தில் சேருகிறதினால் இஸ்ரவேல் மக்களில் வாதை உண்டாகாதபடியும், லேவியர்களை அவர்களிலிருந்து எடுத்து, ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் பரிசாகக் கொடுத்தேன்” என்றார்.
1 Chronicles 9:19கோராகின் மகனாகிய எபியாசாபுக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லூமும், அவனுடைய தகப்பன் வம்சத்தார்களாகிய அவனுடைய சகோதரர்களுமான கோராகியர்கள் பணிவிடைவேலையை விசாரித்து, அவர்கள் பிதாக்கள் யெகோவாவுடைய இடத்திலே கூடாரத்திற்குப்போகிற வழியைக் காவல்காத்ததுபோல, கூடாரத்துவாசல்களைக் காத்துவந்தார்கள்.
1 Chronicles 9:33இவர்களில் லேவியர்களுடைய குடும்பத்தலைவர்களாகிய சங்கீதக்காரர்கள் இரவும் பகலும் தங்களுடைய வேலையை நடத்தவேண்டியதிருந்ததால், மற்ற வேலைக்கு நீங்கலாகித் தங்களுடைய அறைகளில் இருந்தார்கள்.