Numbers 18:7
ஆகையால் நீயும் உன்னோடேகூட உன்னுடைய மகன்களும் பலிபீடத்திற்கும் திரைக்கு உட்புறத்திற்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்வதற்காக, உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் சேவிக்கவேண்டும்; உங்களுடைய ஆசாரிய ஊழியத்தை உங்களுக்கு பரிசாக அருளினேன்; அதைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலை செய்யப்படவேண்டும்” என்றார். 1 ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களின் காணிக்கை
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Exodus 28:1“உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, நீ ஆரோனையும் அவனுடன் அவனுடைய மகன்களாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் மகன்களையும் இஸ்ரவேலர்களிலிருந்து பிரித்து, உன்னிடம் சேர்த்துக்கொள்.
Leviticus 7:35“யெகோவாவுக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஆரோனும் அவனுடைய மகன்களும் நியமிக்கப்பட்ட நாளிலே, இது அபிஷேகம் செய்யப்பட்ட அவர்களுக்குக் யெகோவாவுடைய தகனபலிகளில் கிடைக்கும்படி உண்டான கட்டளை.
Leviticus 16:12யெகோவாவுடைய சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட நறுமண தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து,
Numbers 3:10ஆரோனையும் அவனுடைய மகன்களையுமோ, தங்களுடைய ஆசாரிய ஊழியத்தைச் செய்வதற்காக நியமிக்கவேண்டும், அந்த ஊழியத்தைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படவேண்டும் என்றார்.
Numbers 16:5பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: “நாளைக்குக் யெகோவா தம்முடையவன் இன்னான் என்றும், தம் அருகில் சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார்.
Numbers 18:4உன்னோடே கூடிக்கொண்டு, கூடாரத்தின் எல்லா வேலையையும் செய்ய, ஆசரிப்புக்கூடாரத்தின் காவலைக் காக்கவேண்டும்; அந்நியன் ஒருவனும் உங்களிடத்தில் சேரக்கூடாது.