Numbers 27:11
அவன் தகப்பனுக்குச் சகோதரர்கள் இல்லாமல் இருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுக்குக் நெருங்கிய உறவின் முறையானுக்குச் சுதந்தரமாகக் கொடுக்க வேண்டும்; இது, யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் மக்களுக்கு நியாயவிதிப்பிரமாணமாக இருப்பதாக என்று சொல்” என்றார். 1 மோசே யோசுவாவை தேர்ந்தெடுத்தல்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Leviticus 25:49அவனுடைய தகப்பனின் சகோதரனாவது, அந்தச் சகோதரனுடைய மகனாவது, அவன் குடும்பத்திலுள்ள அவனைச் சேர்ந்த உறவினரில் யாராவது அவனை மீட்கலாம்; தன்னால் கூடுமானால், தன்னைத்தானே மீட்டுக்கொள்ளலாம்.
Ruth 4:3அப்பொழுது அவன் அந்த உறவினனை நோக்கி: எலிமெலேக் என்னும் நம்முடைய சகோதரனுக்கு இருந்த வயல்நிலத்தின் பங்கை, மோவாப் தேசத்திலிருந்து திரும்பி வந்த நகோமி விற்கப்போகிறாள்.
Jeremiah 32:8அப்படியே என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேல், யெகோவாவுடைய வார்த்தையின்படி காவல் நிலையத்தின் முற்றத்தில் என்னிடத்திற்கு வந்து: பென்யமீன் நாட்டு ஆனதோத்தூரிலுள்ள என் நிலத்தை நீர் வாங்கிக்கொள்ளும்; சொத்துரிமை உமக்குண்டு, அதை மீட்கும் அதிகாரம் உமக்குரியது; அதை வாங்கிக்கொள்ளும் என்றான்; அப்பொழுது அது யெகோவாவுடைய வார்த்தை என்று அறிந்துகொண்டேன்.