Numbers 27:21
அவனுடைய ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கவேண்டும்; அவனுக்காக அந்த ஆசாரியன் யெகோவாவுடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே + 27:21 தேவனுடைய சித்தத்தை அறித்துக்கொள்ள ஊரிம் உபயோகிக்கப்பட்டது ஆலோசனை கேட்கவேண்டும்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடுகூட இஸ்ரவேல் மக்களாகிய சபையார் எல்லோரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது” என்றார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Leviticus 8:8அவனுக்கு மார்ப்பதக்கத்தை அணிவித்து, மார்ப்பதக்கத்திலே ஊரீம், தும்மீம் என்பவைகளையும் வைத்து,
Numbers 27:17அந்தச் சபைக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாக இருக்கும்படி, அவர்களைப் போகவும் வரவும் செய்யும்படி, மனிதர்களான எல்லோருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய யெகோவா ஒரு வாலிபனை அவர்கள்மேல் அதிகாரியாக ஏற்படுத்தவேண்டும் என்றான்.
Deuteronomy 33:8லேவியர்களைக்குறித்து: “நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, 1 மேரிபாவின் தண்ணீரின் அருகில் வாக்குவாதம்செய்த உன் பரிசுத்த மனிதனிடம் 1 உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக. 1
Judges 1:1யோசுவா இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி: கானானியர்களை எதிர்த்து யுத்தம்செய்யும்படி, எங்களில் யார் முதலில் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள்.
Judges 20:23அவர்கள் போய், யெகோவாவுக்கு முன்பாக மாலைவரை அழுது, எங்கள் சகோதரர்களாகிய பென்யமீன் மக்களோடு திரும்பவும் யுத்தம் செய்யப்போவோமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; அப்பொழுது யெகோவா: அவர்களுக்கு எதிராகப் போங்கள் என்றார்.
1 Samuel 14:19இப்படிச் சவுல் ஆசாரியனோடே பேசும்போது, பெலிஸ்தர்களின் முகாமில் உண்டான கலகம் வரவர அதிகரித்தது; அப்பொழுது சவுல் ஆசாரியனைப் பார்த்து: இருக்கட்டும் என்றான்.