Numbers 32:33
அப்பொழுது மோசே காத் சந்ததிக்கும், ரூபன் சந்ததிக்கும், யோசேப்பின் மகனாகிய மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்ஜியத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்ஜியத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
34பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்,
Cross References
Numbers 32:1ரூபன், காத் சந்ததிக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாக இருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள்.
Numbers 34:15இந்த இரண்டரைக் கோத்திரத்தாரும் சூரியோதய திசையாகிய கிழக்கே எரிகோவின் அருகிலுள்ள யோர்தானுக்கு இப்புறத்திலே தங்களுடைய சுகந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள்” என்றான்.
Deuteronomy 3:1“பின்பு நாம் திரும்பி, பாசானுக்குப்போகிற வழியாகப் போனோம்; பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய சகல மக்களோடும் நம்மை எதிர்த்துப் போர்செய்யும்படிப் புறப்பட்டு, எத்ரேயிக்கு வந்தான்.
Deuteronomy 3:12“அக்காலத்திலே சொந்தமாகப் பெற்றுக்கொண்ட தேசத்தை அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேர் + 3:12 ஆரோவேர் பட்டணத்தின் வடக்கு பகுதியிலிருந்து. துவங்கி, கீலேயாத் மலைநாட்டில் பாதியையும், அதிலிருக்கிற பட்டணங்களையும், ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் கொடுத்தேன்.
Joshua 12:6அவர்களைக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசேயும் இஸ்ரவேல் மக்களும் முறியடித்தார்கள்; அந்த தேசத்தைக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கும் சொந்தமாகக் கொடுத்தான்.
Joshua 22:4இப்பொழுதும் உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுடைய சகோதரர்களுக்குச் சொல்லியிருந்தபடியே, அவர்களை ஓய்ந்திருக்கச் செய்தார்; ஆகவே யெகோவாவுடைய ஊழியக்காரனாகிய மோசே யோர்தானுக்கு மறுபுறத்திலே உங்களுக்குக் கொடுத்த உங்களுக்குச் சொந்தமான தேசத்தில் இருக்கிற உங்களுடைய கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள்.