சங்கீதங்கள் 35:13
அவர்கள் வியாதியாக இருந்தபோது சணல் என்னுடைய உடையாக இருந்தது; 1 நான் உபவாசத்தால் என்னுடைய ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினேன்; 1 என்னுடைய ஜெபமும் கேட்கப்படவில்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Leviticus 16:29“ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, இஸ்ரவேலனானாலும், உங்களுக்குள் தங்கும் அந்நியனானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக.
1 Kings 21:27ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன்னுடைய ஆடைகளைக் கிழித்து, தன்னுடைய சரீரத்தின்மேல் சணலாடையைப் போர்த்துக்கொண்டு, உபவாசம்செய்து, சணலாடையில் படுத்துத் தாழ்மையாக நடந்துகொண்டான்.
Psalms 69:10என்னுடைய ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; 1 அதுவும் எனக்கு நிந்தையாக முடிந்தது. 1
Isaiah 58:3நாங்கள் உபவாசிக்கும்போது நீர் கவனிக்காமல் இருக்கிறதென்ன? நாங்கள் எங்களுடைய ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் ஆசையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாகச் செய்கிறீர்கள்.
Matthew 5:44நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்களுடைய சத்துருக்களை நேசியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.
Matthew 10:13அந்த வீடு தகுதியாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; தகுதியற்றவர்களாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.