சங்கீதங்கள் 86:7
நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; 1 நீர் என்னைக் கேட்டருளுவீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In the day of my trouble I will call upon thee: for thou wilt answer me.
In Context
6யெகோவாவே, என்னுடைய ஜெபத்திற்குச் செவிகொடுத்து, 1 என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைத் கவனியும். 1
8ஆண்டவரே, தெய்வங்களுக்குள்ளே உமக்கு இணையுமில்லை; 1 உம்முடைய செயல்களுக்கு ஒப்புமில்லை. 1
Cross References
Psalms 18:6எனக்கு உண்டான நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன், 1 என் தேவனை நோக்கி சத்தமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என்னுடைய சத்தத்தைக் கேட்டார், 1 என்னுடைய கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், 1 அவர் காதுகளில் விழுந்தது. 1
Psalms 50:15ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; 1 நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். 1
Psalms 77:1நான் தேவனை நோக்கி என்னுடைய சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், 1 என்னுடைய சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், 1 அவர் எனக்குச் செவிகொடுத்தார். 1
Psalms 142:1யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; 1 யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன். 1
Isaiah 26:16யெகோவாவே, நெருக்கத்தில் உம்மைத் தேடினார்கள்; உம்முடைய தண்டனை அவர்கள் மேலிருக்கும்போது உள்ளத்தில் வேண்டுதல் செய்தார்கள்.
Jonah 2:2என் நெருக்கத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு பதில் கொடுத்தார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.