வெளிப்படுத்தின விசேஷம் 3:8
நீ செய்த உன் செயல்களை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலிக்காமல், என் வசனத்திற்கு கீழ்ப்படிந்து நடந்ததினால், இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Read all of வெளிப்படுத்தின விசேஷம் 3
Cross References
Daniel 11:34இப்படி அவர்கள் விழும்போது கொஞ்சம் ஒத்தாசையால் உதவிபெறுவார்கள்; அப்பொழுது அநேகர் முகதாட்சணியம்செய்து அவர்களை ஒட்டிக்கொள்வார்கள்.
Luke 12:9மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர்களுக்கு முன்பாக மறுதலிக்கப்படுவான்.
John 15:20வேலைக்காரன் தன் எஜமானைவிட பெரியவன் இல்லை என்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினது உண்டானால், உங்களையும், துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வார்த்தையை கடைபிடித்தது உண்டானால், உங்களுடைய வார்த்தையையும் கடைப்பிடிப்பார்கள்.
Acts 3:13ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலை செய்ய தீர்மானித்தபோது, அவனுக்கு முன்பாக அவரை மறுதலித்தீர்கள்.
1 Corinthians 16:9ஏனென்றால், இங்கே பெரிதும் சாதகமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதம் செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.
2 Corinthians 12:8அது என்னைவிட்டு நீங்கும்படி, நான் மூன்றுமுறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன்.