வெளிப்படுத்தின விசேஷம் 8:13
பின்பு, ஒரு கழுகு வானத்தின் நடுவிலே பறந்து வருவதைப் பார்த்தேன்; அவன் அதிக சத்தமாக: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதர்களுடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ (ஆபத்துவரும்) என்று சொல்வதைக்கேட்டேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Read all of வெளிப்படுத்தின விசேஷம் 8
Cross References
Ezekiel 2:10அவர் அதை எனக்கு முன்பாக விரித்தார்; அதில் உள்ளும் வெளியும் எழுதப்பட்டிருந்தது; அதிலே புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந்தது.
Revelation 9:1ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது.
Revelation 11:14இரண்டாம் ஆபத்து கடந்துபோனது; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாக வருகிறது. 1 ஏழாம் எக்காளம்
Revelation 14:6பின்பு வேறொரு தூதன் வானத்தின் நடுவிலே பறப்பதைப் பார்த்தேன்; அவன் பூமியில் வசிக்கின்ற எல்லா தேசத்தார்களுக்கும், கோத்திரத்தார்களுக்கும், மொழிக்காரர்களுக்கும், மக்கள்கூட்டத்தினருக்கும் அறிவிக்கும் நித்திய நற்செய்தியை உடையவனாக இருந்து,