Ruth 4:11
அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற எல்லா மக்களும் பெரியவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன்னுடைய வீட்டிற்கு வருகிற மனைவியைக் யெகோவா இஸ்ரவேல் வீட்டைக் கட்டின இரண்டுபேராகிய ராகேலைப்போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக; நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாக இருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Genesis 29:16லாபானுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள்; மூத்தவள் பெயர் லேயாள், இளையவள் பெயர் ராகேல்.
Genesis 35:16பின்பு, பெத்தேலை விட்டுப் பயணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளைபெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டானது.
Genesis 35:23யாக்கோபின் மகன்கள் பன்னிரண்டுபேர். யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற மகன்கள்.
Genesis 46:8எகிப்திற்கு வந்த இஸ்ரவேலரின் பெயர்களாவன: யாக்கோபும் அவனுடைய மகன்களும்; யாக்கோபுடைய மூத்தமகனான ரூபன்.
Deuteronomy 25:7அவன் தன் சகோதரனுடைய மனைவியைத் திருமணம்செய்ய விருப்பமில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பர்களிடத்திற்குப் போய், என் கணவனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பெயரை இஸ்ரவேலில் நிலைக்கச்செய்யமாட்டேன் என்கிறான்; கணவனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் விருப்பமில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக.
Ruth 1:2அந்த மனிதனுடைய பெயர் எலிமெலேக்கு + 1:2 என் தேவன் தான் என் இராஜா , அவனுடைய மனைவியின் பெயர் நகோமி + 1:2 இனிமையானவள், அவனுடைய இரண்டு மகன்களில் ஒருவன் பெயர் மக்லோன் + 1:2 பலவீனமானவன், மற்றொருவன் பெயர் கிலியோன் + 1:2 தோல்வி; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியர்களாகிய அவர்கள் மோவாப் தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள்.