1 நாளாகமம் 15:28
அப்படியே இஸ்ரவேலனைத்தும் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கெம்பீரத்தோடும், எக்காளங்கள் பூரிகைகள் கைத்தாளங்களின் சத்தத்தோடும், தம்புருக்களையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும் கொண்டுவந்தார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
1 Chronicles 13:8தாவீதும் எல்லா இஸ்ரவேலர்களும் தங்களுடைய முழு பெலத்தோடும் தேவனுக்கு முன்பாக சுரமண்டலங்களையும் தம்புருக்களையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் இசைத்து மகிழ்ச்சியாக ஆடிப்பாடினார்கள்.
1 Chronicles 25:1மேலும் சுரமண்டலங்களாலும், தம்புருக்களாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் மகன்களில் சிலரை, தாவீதும் தேவாலய சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் செய்கைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கையாவது:
Ezra 3:10சிற்ப ஆசாரிகள் யெகோவாவுடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடுகிறபோது, இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, யெகோவாவை துதிப்பதற்கு, ஆடைகளை அணிந்து, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்களையும், தாளங்களைத் தட்டுகிற ஆசாபின் மகனாகிய லேவியர்களையும் நிறுத்தினார்கள்.
Psalms 47:6தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; 1 நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள். 1
Psalms 98:4பூமியில் உள்ளவர்களே, நீங்களெல்லோரும் 1 யெகோவாவை நோக்கி ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாகப் பாடுங்கள். 1
Psalms 150:3எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; 1 வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். 1