1 நாளாகமம் 3:12
இவனுடைய மகன் அமத்சியா; இவனுடைய மகன் அசரியா; இவனுடைய மகன் யோதாம்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Amaziah his son, Azariah his son, Jotham his son,
In Context
11இவனுடைய மகன் யோராம்; இவனுடைய மகன் அகசியா; இவனுடைய மகன் யோவாஸ்.
13இவனுடைய மகன் ஆகாஸ்; இவனுடைய மகன் எசேக்கியா; இவனுடைய மகன் மனாசே.
Cross References
2 Kings 14:1இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் மகனாகிய யோவாசுடைய இரண்டாம் வருட ஆட்சியில் யூதாவின் ராஜாவாகிய யோவாசின் மகன் அமத்சியா ராஜாவானான்.
2 Kings 15:5யெகோவா இந்த ராஜாவை வாதித்ததால், அவன் தன் மரணநாள்வரை தொழுநோயாளியாக இருந்து, தனித்து ஒரு வீட்டிலே குடியிருந்தான்; ராஜாவின் மகனாகிய யோதாம் அரண்மனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் மக்களை நியாயம் விசாரித்தான்.
2 Kings 15:30ஏலாவின் மகனாகிய ஓசெயா ரெமலியாவின் மகனாகிய பெக்காவுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, அவனை உசியாவின் மகனாகிய யோதாமின் இருபதாம் வருடத்தில் வெட்டிக்கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
2 Chronicles 25:1அமத்சியா இருபத்தைந்தாம் வயதிலே ராஜாவாகி, இருபத்தொன்பது வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; எருசலேம் நகரத்தாளாகிய அவனுடைய தாயின் பெயர் யொவதானாள்.
2 Chronicles 27:1யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருடங்கள் எருசலேமிலே ஆட்சிசெய்தான்; சாதோக்கின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் எருசாள்.