1 நாளாகமம் 4:9
யாபேஸ் தன்னுடைய சகோதரர்களைவிட மதிப்பிற்குரியவனாக இருந்தான். அவனுடைய தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பெயரிட்டாள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
8கோஸ் என்பவன் அனூபையும், சோபேபாகையும், ஆருமின் மகனாகிய அகர்கேலின் வம்சங்களையும் பெற்றான்.
Cross References
Genesis 3:16அவர் பெண்ணை நோக்கி: “நீ கர்ப்பவதியாக இருக்கும்போது உன் வேதனையை மிகவும் அதிகப்படுத்துவேன்; வேதனையோடு பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன்னுடைய கணவனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான்” என்றார்.
Genesis 35:18மரணகாலத்தில் அவளுடைய உயிர் பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி + 35:18 துக்கத்தின் மகன்என்று பெயரிட்டாள்; அவனுடைய தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பெயரிட்டான்.
1 Chronicles 7:23பின்பு அவன் தன்னுடைய மனைவியிடம் இணைந்ததால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு மகனைப் பெற்றாள்; அவன், தன்னுடைய குடும்பத்திற்குத் தீங்கு உண்டானதால், இவனுக்கு பெரீயா என்று பெயரிட்டான்.
Isaiah 43:4நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனிதர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக மக்களையும் கொடுப்பேன்.