1 சாமுவேல் 20:3
அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாக அறிவார்; ஆகையால் யோனத்தானுக்கு மனவருத்தம் உண்டாகாதபடி அவன் இதை அறியக்கூடாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரம் மாத்திரம் இருக்கிறது என்று யெகோவாவுடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று பதில் சொல்லி ஆணையிட்டான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Deuteronomy 6:13உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே வாக்குறுதி கொடுப்பாயாக.
1 Samuel 1:26அப்பொழுது அவள்: என்னுடைய ஆண்டவனே, இங்கே உம்முடைய அருகிலே நின்று யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்த பெண் நான்தான் என்று என்னுடைய ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.
1 Samuel 25:26இப்பொழுதும் என்னுடைய ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்த வரவும், உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும், யெகோவா உமக்கு இடங்கொடுக்கவில்லை என்பதைக் யெகோவாடைய ஜீவனைக்கொண்டும், உம்முடைய ஜீவனைக்கொண்டும் சொல்லுகிறேன்; இப்போதும் உம்முடைய எதிரிகளும், என்னுடைய ஆண்டவனுக்கு விரோதமாகத் தீங்கு தேடுகிறவர்களும், நாபாலைப்போல ஆகட்டும்.
2 Samuel 15:21ஆனாலும் ஈத்தாய் ராஜாவுக்குப் பதிலாக: ராஜாவான என்னுடைய ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும், இருப்பான் என்று யெகோவாவுடைய ஜீவனையும் ராஜாவான என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
2 Kings 2:4பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு; யெகோவா என்னை எரிகோவரை போக அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுவதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள்.
Psalms 116:3மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, 1 பாதாளக் கண்ணிகள் என்னைப் பிடித்தது; கவலையும் துன்பமும் அடைந்தேன். 1