2 சாமுவேல் 18:19
சாதோக்கின் மகனான அகிமாஸ்: யெகோவா ராஜாவை அவர்களுடைய எதிரிகளின் கைக்கு விலக்கி நியாயம் செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் வேகமாக ஓடட்டும் என்றான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
2 Samuel 15:36அங்கே அவர்களோடு சாதோக்கின் மகன் அகிமாசும், அபியத்தாரின் மகன் யோனத்தானும், அவர்களுடைய இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்; நீங்கள் கேள்விப்படுகிற செய்தியையெல்லாம் அவர்கள் மூலமாக எனக்கு அனுப்புங்கள் என்றான்.
2 Samuel 18:23அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமவெளி நிலத்தின் வழியாக ஓடி கூஷிக்கு முந்திப்போனான்.
2 Samuel 18:31இதோ, கூஷி வந்து: ராஜாவான என்னுடைய ஆண்டவனே, நற்செய்தி, இன்று யெகோவா உமக்கு எதிராக எழும்பின எல்லோடைய கைக்கும் உம்மை விலக்கி நியாயம் செய்தார் என்றான்.
Psalms 7:8யெகோவா மக்களுக்கு நியாயம் செய்வார்; 1 யெகோவாவே, என்னுடைய நீதியினாலும் என்னிலுள்ள உண்மையினாலும் 1 எனக்கு நியாயம்செய்யும். 1
Psalms 9:16யெகோவா தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; 1 துன்மார்க்கன் தன்னுடைய கைகளின் செயல்களினால் சிக்கிக்கொண்டான். (இகாயோன், சேலா.) 1
Psalms 10:18மண்ணான மனிதன் இனிப் பலவந்தம்செய்யத் தொடராமல், 1 தேவனே நீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் 1 ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய 1 உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளுவீர்.