2 Samuel 3:8
அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபங்கொண்டு: உம்மை தாவீதின் கையில் ஒப்புக்கொடுக்காமல், இந்த நாள்வரை உம்முடைய தகப்பனான சவுலின் குடும்பத்திற்கும், அவருடைய சகோதரர்களுக்கும், நண்பர்களுக்கும், தயவு செய்கிறவனான என்னை நீர் இன்று ஒரு பெண்ணிற்காக குற்றம் கண்டுபிடிப்பதற்கு, நான் யூதாவைச் சேர்ந்த ஒரு நாயின் தலையா?
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
1 Samuel 15:28அப்பொழுது சாமுவேல் அவனை பார்த்து: யெகோவா இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்ஜியத்தைக் கிழித்துப்போட்டு, உம்மைவிட உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார்.
1 Samuel 24:14இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின்தொடருகிறீர்?
2 Samuel 3:18இப்போதும் அப்படிச் செய்யுங்கள்; என்னுடைய தாசனான தாவீதின் கைகளினால், என்னுடைய மக்களான இஸ்ரவேலைப் பெலிஸ்தர்களின் கைக்கும், அவர்களுடைய எல்லா எதிரிகளின் கைகளுக்கும் மீட்டு இரட்சிப்பேன் என்று யெகோவா தாவீதைக்குறித்துச் சொல்லியிருக்கிறாரே என்றான்.
2 Samuel 9:8அப்பொழுது அவன் வணங்கி: செத்த நாயைப் போலிருக்கிற என்னை நீர் நோக்கிப் பார்ப்பதற்கு, உமது அடியான் யார் என்றான்.
2 Kings 8:13அப்பொழுது ஆசகேல், இத்தனை பெரிய காரியத்தைச் செய்வதற்கு நாயைப்போல இருக்கிற உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் யெகோவா எனக்குத் தெரிவித்தார் என்றான்.
Psalms 76:10மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்; 1 மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர். 1