The Bible Software
bible.softwareஆமோஸ்ஆமோஸ் 5 › ஆமோஸ் 5:15

ஆமோஸ் 5:15

நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, நுழைவுவாயிலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய யெகோவா யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Hate the evil, and love the good, and establish judgment in the gate: it may be that the LORD God of hosts will be gracious unto the remnant of Joseph.

In Context

14நீங்கள் பிழைக்கும்படி தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய யெகோவா உங்களுடன் இருப்பார்.

16ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத் தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ, ஐயோ, என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரி பாடத்தெரிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள்.

Read all of ஆமோஸ் 5

Cross References

Exodus 32:30மறுநாளில் மோசே மக்களை நோக்கி: “நீங்கள் மகா பெரிய பாவம் செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் யெகோவாவினிடத்திற்கு ஏறிப்போகிறேன்” என்றான்.

1 Kings 20:31அப்பொழுது அவனுடைய வேலைக்காரர்கள் அவனை நோக்கி: இதோ, இஸ்ரவேல் வம்சத்து ராஜாக்கள் தயவுள்ள ராஜாக்கள் என்று கேட்டிருக்கிறோம்; நாங்கள் சணலாடைகளை எங்களுடைய இடுப்புகளில் கட்டி, கயிறுகளை எங்களுடைய தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவிடம் போவோம்; ஒருவேளை உம்மை உயிரோடு வைப்பார் என்று சொல்லி,

2 Kings 14:26இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடியது என்றும், அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்றும் யெகோவா பார்த்தார்.

2 Kings 19:4ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி அசீரியா ராஜாவாகிய தன் எஜமானால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளையெல்லாம் உமது தேவனாகிய யெகோவா கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய யெகோவா கேட்டிருக்கிற வார்த்தைகளுக்காக தண்டனை செய்வார்; ஆகையால் இன்னும் மீதியாக இருக்கிறவர்களுக்காக விண்ணப்பம்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.

Psalms 34:14தீமையை விட்டு விலகி, நன்மை செய்; 1 சமாதானத்தைத் தேடி, அதைத் பின்தொடர்ந்துகொள். 1

Psalms 37:27தீமையை விட்டு விலகி, நன்மை செய்; 1 என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய். 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study ஆமோஸ் 5:15

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← ஆமோஸ் 5:14ஆமோஸ் 5ஆமோஸ் 5:16 →