Daniel 4:37
ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய செயல்களெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; பெருமையாக நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Exodus 8:4அந்தத் தவளைகள் உன்மேலும், உன்னுடைய மக்கள்மேலும், வேலைக்காரர்கள் எல்லோர்மேலும் வந்து ஏறும் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல்” என்றார்.
Deuteronomy 32:4“அவர் கன்மலை; 1 அவருடைய செயல் உத்தமமானது; 1 அவருடைய வழிகளெல்லாம் நியாயம், 1 அவர் அநீதி இல்லாத சத்தியமுள்ள தேவன்; 1 அவர் நீதியும் செம்மையுமானவர். 1
2 Chronicles 33:11ஆகையால் யெகோவா: அசீரியா ராஜாவின் தளபதிகளை அவர்கள்மேல் வரச்செய்தார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டி பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
Esther 6:10அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: சீக்கிரமாக நீ சொன்னபடி ஆடையையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரண்மனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்படியே செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான்.
Psalms 33:4யெகோவாவுடைய வார்த்தை உத்தமமும், 1 அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது. 1
Psalms 119:75யெகோவாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், 1 உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன். 1