உபாகமம் 24:19
“நீ உன் பயிரை அறுக்கும்போது உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாக வைத்து வந்தாயானால், அதை எடுத்துவர திரும்பிப் போகவேண்டாம்; உன் தேவனாகிய யெகோவா நீ செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிப்பதற்காக, அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Leviticus 23:22“உங்கள் தேசத்தின் விளைச்சலை நீங்கள் அறுக்கும்போது, வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் அந்நியனுக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்று சொல்” என்றார்.
Deuteronomy 15:10அவனுக்குத் தாராளமாகக் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதன்காரணமாக உன் தேவனாகிய யெகோவா உன்னுடைய எல்லாக் செயல்களிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
Deuteronomy 26:13நீ உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான பொருட்களை என் வீட்டிலிருந்து எடுத்துவந்து, லேவியனுக்கும், அந்நியனுக்கும், திக்கற்ற பிள்ளைக்கும், விதவைக்கும் கொடுத்தேன்; உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை, மறக்கவும் இல்லை.
Job 31:16ஏழைகள் விரும்பியதை நான் கொடுக்காமலிருந்து, 1 விதவையின் கண்ணீரினால் கண்களைப் பூத்துப்போகவைத்து, 1
Psalms 41:1பெலவீனமானவன்மேல் கவலையுள்ளவன் பாக்கியவான்; 1 தீங்குநாளில் யெகோவா அவனை விடுவிப்பார். 1
Proverbs 11:24வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு; 1 அதிகமாக தனக்கென்று மட்டும் வைத்துக்கொண்டும் 1 வறுமையடைபவர்களும் உண்டு. 1