The Bible Software
bible.softwareஉபாகமம்உபாகமம் 28 › உபாகமம் 28:52

உபாகமம் 28:52

உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் பாதுகாப்புமான உன் மதில்கள் விழும்வரை, அவன் உன்னுடைய வாசல்களிலெங்கும் உன்னை முற்றுகையிடுவான்; உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த உன்னுடைய தேசமெங்குமுள்ள உன்னுடைய ஒவ்வொரு வாசல்களிலும் உன்னை முற்றுகையிடுவான்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And he shall besiege thee in all thy gates, until thy high and fenced walls come down, wherein thou trustedst, throughout all thy land: and he shall besiege thee in all thy gates throughout all thy land, which the LORD thy God hath given thee.

In Context

51நீ அழியும்வரை அந்த மனிதன் உன் மிருகஜீவன்களின் பலனையும், உன் நிலத்தின் பலனையும் சாப்பிடுவான்; அவன் உன்னை முற்றிலும் அழிக்கும்வரை உன் தானியத்திலும், திராட்சைரசத்திலும், எண்ணெயிலும், உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாக வைக்கமாட்டான்.

53உன்னுடைய எதிரிகள் உன்னை முற்றுகையிட்டு நெருக்கும்போது, உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுத்த உன் கர்ப்பப்பிறப்பான உன்னுடைய மகன்கள் மற்றும் மகள்களின் மாம்சத்தை சாப்பிடுவாய்.

Read all of உபாகமம் 28

Cross References

Leviticus 26:25என் உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள்மேல் வரச்செய்து, நீங்கள் உங்கள் பட்டணங்களில் சேர்ந்தபின், கொள்ளைநோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன்; எதிரியின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள்.

2 Kings 18:13யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினான்காம் வருட ஆட்சியிலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற பாதுகாப்பான சகல பட்டணங்களுக்கும் விரோதமாக வந்து அவைகளைப் பிடித்தான்.

2 Kings 25:1அவன் அரசாட்சிசெய்யும் ஒன்பதாம் வருடம் பத்தாம்மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அவனுடைய எல்லா படைகளோடு எருசலேமுக்கு விரோதமாக வந்து, அதற்கு எதிரே முகாமிட்டு, சுற்றிலும் அதற்கு எதிராக முற்றுகைச் சுவர்களைக் கட்டினான்.

Isaiah 1:7உங்களுடைய தேசம் பாழாயிருக்கிறது; உங்கள் பட்டணங்கள் நெருப்பினால் சுட்டெரிக்கப்பட்டது; உங்கள் நாட்டை அந்நியர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாக அழிக்கிறார்கள்; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழான தேசம்போல் இருக்கிறது.

Jeremiah 10:18இதோ, நான் இந்த முறை தேசத்தின் குடிமக்களைக் கவண்கொண்டெறிந்து, அவர்கள் கண்டு உணரும்படி அவர்களுக்கு நெருக்கமுண்டாக்குவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

Jeremiah 37:8கல்தேயரோவென்றால், திரும்பி வந்து இந்த நகரத்திற்கு விரோதமாகப் போர்செய்து, அதைப் பிடித்து, நெருப்பினால் சுட்டெரிப்பார்கள்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study உபாகமம் 28:52

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← உபாகமம் 28:51உபாகமம் 28உபாகமம் 28:53 →