உபாகமம் 32:47
இது உங்களுக்கு பயனற்ற காரியம் அல்லவே; இது உங்கள் உயிராயிருக்கிறது, நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ள யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும் தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கச்செய்வீர்கள்” என்றான். 1 மோசேயின் மரணம்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
48அந்த நாளிலேதானே யெகோவா மோசேயை நோக்கி:
Cross References
Leviticus 18:5“ஆகையால் என் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் யெகோவா.
Deuteronomy 30:16நீ பிழைத்து, பெருகுவதற்கும், நீ சொந்தமாக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய யெகோவா உன்னை ஆசீர்வதிப்பதற்கும், நீ உன் தேவனாகிய யெகோவாவில் அன்புசெலுத்தவும், அவருடைய வழிகளில் நடக்கவும், அவருடைய கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்.
Deuteronomy 30:20யெகோவா உன் முற்பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு வாக்களித்துக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படி, உன் தேவனாகிய யெகோவாவில் அன்புசெலுத்தி, அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு வாழ்க்கையும், நீண்ட ஆயுளுமானவர்” என்றான்.
Proverbs 3:1என் மகனே, என்னுடைய போதகத்தை மறவாதே; 1 உன்னுடைய இருதயம் என்னுடைய கட்டளைகளைக் காக்கட்டும். 1
Proverbs 3:22அவைகள் உன்னுடைய ஆத்துமாவுக்கு உயிரும், 1 உன்னுடைய கழுத்துக்கு அலங்காரமுமாகவும் இருக்கும். 1
Proverbs 4:22அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும், 1 அவர்களுடைய உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம். 1