பிரசங்கி 9:18
யுத்த ஆயுதங்களைவிட ஞானமே நலம்; பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Wisdom is better than weapons of war: but one sinner destroyeth much good.
In Context
17மூடர்களை ஆளும் அதிபதியின் கூக்குரலைவிட ஞானிகளுடைய அமைதியான வார்த்தைகளே கேட்கப்படக்கூடியவைகள்.
Cross References
Joshua 7:5ஆயீயின் மனிதர்கள் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளியிலிருந்து செபாரீம் + 7:5 கல்லுகள் உடைக்கும் இடம்.வரைக்கும் அவர்களைத் துரத்தி, மலையடிவாரத்தில் அவர்களை வெட்டினார்கள்; மக்களின் இருதயம் கரைந்து தண்ணீராகப்போனது.
Joshua 22:20சேராவின் மகனாகிய ஆகான் சாபத்தீடானப் பொருளைக்குறித்துத் துரோகம்செய்ததினாலே, இஸ்ரவேல் மக்களின்மேல் கடுங்கோபம் வரவில்லையா? + 22:20 7:1, 26. அவன் ஒருவன்மட்டும் தன்னுடைய அக்கிரமத்தினாலே மடிந்துபோகவில்லையென்று யெகோவாவுடைய சபையார்கள் எல்லோரும் சொல்லச்சொன்னார்கள் என்றார்கள்.
1 Samuel 14:30இன்றையதினம் மக்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் எதிரிகளின் கொள்ளையிலே ஏதாவது சாப்பிட்டிருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான படுகொலை மிகவும் அதிகமாயிருக்குமே என்றான்.
2 Samuel 20:1அப்பொழுது பென்யமீன் மனிதனான பிக்கிரியின் மகனான சேபா என்னும் பெயருள்ள பிரச்சினைக்குரிய மனிதன் ஒருவன் தற்செயலாக அங்கே இருந்தான்; அவன் எக்காளம் ஊதி: எங்களுக்கு தாவீதிடம் பங்கும் இல்லை, ஈசாயின் மகனிடம் எங்களுக்குச் சுதந்தரமும் இல்லை; இஸ்ரவேலர்களே, நீங்கள் அவரவர் தங்கள் வீடுகளுக்குப் போய்விடுங்கள் என்றான்.
Ecclesiastes 7:19நகரத்திலுள்ள பத்து அதிபதிகளைவிட, ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும்.
Ecclesiastes 10:1செத்த ஈக்கள் நறுமணத் தைலக்காரனுடைய நறுமணத் தைலத்தை நாறிக் கெட்டுப்போகச்செய்யும்; ஞானத்திலும் மதிப்பிலும் பெயர்பெற்றவனைச் சிறிய மதியீனமும் அப்படியே செய்யும்.