Exodus 28:30
நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் + 28:30 தேவனுடைய சித்தத்தை அறிந்துக் கொள்ள இந்த ஊரீம் தும்மீம் உபயோகப்படுத்தப்பட்டது என்பவைகளை வைக்கவேண்டும்; ஆரோன் யெகோவாவுடைய சந்நிதானத்தில் நுழையும்போது, அவைகள் அவனுடைய இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன்னுடைய இருதயத்தின்மேல் இஸ்ரவேலர்களுடைய நியாயவிதியைக் யெகோவாவுடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் அணிந்துகொள்ளவேண்டும். 1 மற்ற ஆசாரிய உடைகள், (யாத்திராகமம் 39:22-31).
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
31“ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் உண்டாக்கவேண்டும்.
Cross References
Numbers 27:21அவனுடைய ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கவேண்டும்; அவனுக்காக அந்த ஆசாரியன் யெகோவாவுடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே + 27:21 தேவனுடைய சித்தத்தை அறித்துக்கொள்ள ஊரிம் உபயோகிக்கப்பட்டது ஆலோசனை கேட்கவேண்டும்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடுகூட இஸ்ரவேல் மக்களாகிய சபையார் எல்லோரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது” என்றார்.
Judges 1:1யோசுவா இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி: கானானியர்களை எதிர்த்து யுத்தம்செய்யும்படி, எங்களில் யார் முதலில் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள்.
Judges 20:23அவர்கள் போய், யெகோவாவுக்கு முன்பாக மாலைவரை அழுது, எங்கள் சகோதரர்களாகிய பென்யமீன் மக்களோடு திரும்பவும் யுத்தம் செய்யப்போவோமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; அப்பொழுது யெகோவா: அவர்களுக்கு எதிராகப் போங்கள் என்றார்.
1 Samuel 23:9தனக்கு தீங்கு செய்யச் சவுல் முயற்சிக்கிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.
1 Samuel 30:7தாவீது அகிமெலேக்கின் மகனான அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்தான்.
Nehemiah 7:65ஊரீம் தும்மீம் + 7:65 யாத். 28:30 ஐ பார்க்க, இவைகள் மூலமாக தேவ சித்தம் அறிய பயன்படுத்தினார்கள். என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் வரும்வரை, அவர்கள் மகா பரிசுத்தமானதை சாப்பிடக்கூடாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.