எசேக்கியேல் 16:39
உன்னை அவர்களுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் உன்னுடைய மண்டபங்களை இடித்து, உன்னுடைய மேடைகளைத் தரையாக்கிப்போட்டு, உன்னுடைய உடைகளை அவிழ்த்து, உன்னுடைய சிங்கார ஆபரணங்களை எடுத்துக்கொண்டு, உன்னை உடையில்லாமலும் நிர்வாணமுமாக விட்டுப்போய்,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Leviticus 26:30நான் உங்கள் மேடைகளை அழித்து, உங்கள் விக்கிரகச் சிலைகளை உடைத்து, உங்கள் உடல்களை உங்கள் நரகலான தேவர்களுடைய உடல்கள்மேல் எறிவேன்; என் ஆத்துமா உங்களை வெறுக்கும்.
Isaiah 27:9ஆகையால், அதினால் யாக்கோபின் அக்கிரமம் நீக்கப்படும்; தோப்புஉருவங்களும், சிலைகளும் இனி நிற்காமல் அவர்கள் பலிபீடங்களின் கற்களையெல்லாம் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கற்களாக்கிவிடும்போது, அவர்களுடைய பாவத்தை அவர் நீக்கிவிடுவாரென்பதே அதினால் உண்டாகும் பலன்.
Ezekiel 16:10சித்திரத்தையலாடையை உனக்கு உடுத்தி, வண்ணம் தீட்டப்பட்ட காலணிகளை உனக்கு அணிவித்து, உடுத்த மெல்லிய புடவையையும், மூடிக்கொள்ளப் பட்டுச்சால்வையையும் உனக்குக் கொடுத்து,
Ezekiel 16:31எல்லா வழிமுனையிலும் உன்னுடைய மண்டபங்களைக் கட்டி, எல்லா வீதிகளிலும் உன்னுடைய மேடைகளை உண்டாக்கினபடியால், உன்னுடைய இருதயம் எவ்வளவாகக் களைத்துப்போயிருக்கிறது என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ கட்டணத்தை அலட்சியம் செய்கிறகிறதினால், நீ வேசியைப்போல இல்லாமல்,
Ezekiel 23:29அவர்கள் உன்னை வெறுப்பாக நடத்தி, உன்னுடைய உழைப்பின் பலனையெல்லாம் எடுத்துக்கொண்டு, உன்னை முழுவதும் நிர்வாணமாக்கிவிடுவார்கள்; அப்படியே உன்னுடைய வெட்கக்கேடும் உன்னுடைய முறைகேடுமான உன்னுடைய விபசாரத்தின் நிர்வாணம் வெளிப்படுத்தப்படும்.
Hosea 2:5அவர்களுடைய தாய் விபச்சாரம்செய்தாள், அவர்களைக் கர்ப்பந்தரித்தவள் இழிவான காரியங்களைச் செய்தாள்; அப்பத்தையும், தண்ணீரையும், ஆட்டுரோமத்தையும், பஞ்சையும், எண்ணெயையும், பானங்களையும் கொடுத்துவருகிற என் நாயகர்களைப் பின்பற்றிப்போவேன் என்றாள்.