எசேக்கியேல் 2:1
அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே + 2:1 இந்த புத்தகத்தில் தேவன் எசேக்கியேலை மனிதகுமாரனே என்று சொல்லுவதற்கு காரணம் மனிதன் மரணமடையாமல் நித்தியமாக வாழ்பவன் இல்லை என்பதை சுட்டிகாட்டத்தான், உன்னுடைய காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And he said unto me, Son of man, stand upon thy feet, and I will speak unto thee.
In Context
Cross References
Psalms 8:4மனிதனை நீர் நினைக்கிறதற்கும், 1 மனுக்குலத்தை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். 1
Ezekiel 2:3அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, எனக்கு எதிராக எழும்பின கலகக்கார தேசமாகிய இஸ்ரவேல் மக்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; அவர்களும் அவர்கள் முன்னோர்களும் இந்த நாள்வரைக்கும் எனக்கு எதிராக துரோகம் செய்தார்கள்.
Ezekiel 2:8மனிதகுமாரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாக இல்லாமல், நான் உன்னுடன் சொல்லுகிறதைக் கேள்; உன்னுடைய வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதை சாப்பிடு என்றார்.
Ezekiel 3:4பின்பு அவர் என்னை நோக்கி: மனிதகுமாரனே, நீ போய், இஸ்ரவேல் மக்களிடம் போய், என்னுடைய வார்த்தைகளைக் கொண்டு அவர்களுடன் பேசு.
Ezekiel 3:17மனிதகுமாரனே, உன்னை இஸ்ரவேல் மக்களுக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என்னுடைய வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என்னுடைய பெயராலே அவர்களை எச்சரிப்பாயாக.
Ezekiel 5:1பின்னும் அவர்: மனிதகுமாரனே, சவரகன் கத்தியாகிய கூர்மையான கத்தியை வாங்கி, அதினால் உன்னுடைய தலையையும் உன்னுடைய தாடியையும் சிரைத்துக்கொண்டு, பின்பு நிறுக்கும் தராசை எடுத்து, அந்த முடியைப் பங்கிடவேண்டும்.