Ezekiel 20:21
ஆனாலும் பிள்ளைகளும் எனக்கு விரோதமாக எழும்பினார்கள்; என்னுடைய கட்டளைகளின்படியே மனிதன் செய்தால் அவைகளால் பிழைப்பானே; அவர்களோ அவைகளில் நடவாமலும், என்னுடைய நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி செய்யாமலும், என்னுடைய ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கிப் போட்டார்கள்; ஆகையால் வனாந்திரத்திலே என்னுடைய கோபத்தை அவர்களில் தீர்த்துக்கொள்ளும்படி என்னுடைய கோபத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Numbers 25:1இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கும்போது, மக்கள் மோவாபின் மகள்களோடு விபசாரம் செய்யத் தொடங்கினார்கள்.
Deuteronomy 31:27நான் உன் கலக குணத்தையும் உன் பிடிவாதத்தையும் அறிந்திருக்கிறேன்; இன்று நான் இன்னும் உங்களுடன் உயிரோடிருக்கும்போது, யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம்செய்தீர்களே; என் மரணத்திற்குப்பின்பு எவ்வளவு அதிகமாகக் கலகம்செய்வீர்கள்!
2 Chronicles 34:25அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் செயல்கள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தெய்வங்களுக்குத் தூபங்காட்டினதால், என் கடுங்கோபம் தணிந்து போகாமலிருக்க இந்த இடத்தின்மேல் இறங்கும் என்று யெகோவா உரைக்கிறார்.
Psalms 106:29தங்களுடைய செயல்களினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்; 1 ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது. 1
Lamentations 4:11யெகோவா தமது கோபத்தை நிறைவேற்றி, தமது கடுங்கோபத்தை ஊற்றி, 1 சீயோனில் அக்கினியைக் கொளுத்தினார்; 1 அது அதின் அஸ்திபாரங்களை உடைத்துப்போட்டது. 1
Ezekiel 13:15இப்படிச் சுவரிலும், அதற்குச் சாரமில்லாத சாந்தைப் பூசினவர்களிலும் நான் என்னுடைய கடுங்கோபத்தைத் தீர்த்துக்கொண்டு: சுவருமில்லை, அதற்குச் சாந்து பூசினவர்களுமில்லை.