Haggai 2:6
சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: கொஞ்சக்காலத்திற்குள்ளே இன்னும் ஒருமுறை நான் வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், வெட்டாந்தரையையும் அசையச்செய்வேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Job 9:6பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் இடத்திலிருந்து அசையவைக்கிறார். 1
Isaiah 10:25ஆனாலும் இன்னும் கொஞ்சக்காலத்திற்குள்ளே என் கடுங்கோபமும், அவர்களைச் அழிக்கப்போகிறதினால் என் கோபமும் தணிந்துபோகும் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார்.
Isaiah 29:17இன்னும் கொஞ்ச காலத்திலல்லவோ லீபனோன் செழிப்பான வயல்வெளியாக மாறும்; செழிப்பான வயல்வெளி காடாக என்னப்படும்.
Jeremiah 4:23பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கற்றதும் வெறுமையுமாயிருந்தது; வானங்ளையும் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.
Ezekiel 38:20என்னுடைய பிரசன்னத்தினால் கடலின் மீன்களும், ஆகாயத்துப் பறவைகளும், வெளியின் மிருகங்களும், தரையில் ஊருகிற எல்லா பிராணிகளும், தேசமெங்குமுள்ள எல்லா உயிரினங்களும் அதிரும்; மலைகள் இடியும்; செங்குத்தானவைகள் விழும்; எல்லா மதில்களும் தரையிலே விழுந்துபோகும் என்று என்னுடைய எரிச்சலினாலும் என்னுடைய கோபத்தின் அக்கினியினாலும் நிச்சயமாகச் சொல்லுகிறேன்.
Joel 3:16யெகோவா சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் யெகோவா தமது மக்களுக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் மக்களுக்கு பாதுகாப்பான கோட்டையுமாக இருப்பார்.