எபிரெயர் 12:19
எக்காளமுழக்கத்தினிடமும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடமும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடி வேண்டிக்கொண்டார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Exodus 20:1தேவன் பேசிச் சொல்லிய எல்லா வார்த்தைகளாவன.
Deuteronomy 4:12அந்த அக்கினியின் நடுவிலிருந்து யெகோவா உங்களுடன் பேசினார்; வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள்; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி, ஒரு உருவத்தையும் காணவில்லை.
Deuteronomy 5:3அந்த உடன்படிக்கையைக் யெகோவா நம்முடைய முற்பிதாக்களுடன் செய்யாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம் அனைவரோடும் செய்தார்.
Deuteronomy 18:16ஓரேபிலே சபை கூட்டப்பட்ட நாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய யெகோவாவின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய யெகோவாவை நீ வேண்டிக்கொண்டதையெல்லாம் அவர் செய்வார்.
1 Thessalonians 4:16ஏனென்றால், கர்த்தர்தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் பரலோகத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவிற்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.