Hebrews 7:1
இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாக இருந்தான்; ராஜாக்களை முறியடித்து திரும்பிவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Genesis 14:18அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் + 14:18 எருசலேம் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சைரசமும் கொண்டுவந்து,
Psalms 57:2எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன். 1
Psalms 78:35தேவன் தங்களுடைய கன்மலையென்றும், 1 உன்னதமான தேவன் தங்களுடைய மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள். 1
Isaiah 41:2கிழக்கிலிருந்து நீதிமானை + 41:2 கோரேஸ் என்ற பெர்சியாவின் தேசாதிபதி, பார்க்க 45:1. எழுப்பி, தமது பாதப்படியிலே வரவழைத்தவர் யார்? தேசங்களை அவனுக்கு ஒப்புக்கொடுத்து, அவனை ராஜாக்களுக்கு ஆண்டவனாக்கி, அவர்களை அவனுடைய பட்டயத்திற்குத் தூசியும், அவன் வில்லுக்குச் சிதறடிக்கப்பட்ட வைக்கோலுமாக்கி,
Daniel 5:18ராஜாவே, உன்னதமான தேவன் உம்முடைய தகப்பனாகிய நேபுகாத்நேச்சாருக்கு ராஜ்ஜியத்தையும் மகத்துவத்தையும் கனத்தையும் மகிமையையும் கொடுத்தார்.
Micah 6:6என்னத்தைக்கொண்டு நான் யெகோவாவுடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்? தகனபலிகளோடும், ஒருவயதுடைய கன்றுக்குட்டிகளோடும் அவருடைய சந்நிதியில் வரவேண்டுமோ?