Hosea 2:18
அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களுடனும், ஆகாயத்துப் பறவைகளுடனும், பூமியிலே ஊரும் பிராணிகளுடனும், ஒரு உடன்படிக்கைசெய்து, வில்லையும் பட்டயத்தையும் போரையும் தேசத்திலே இராதபடிக்கு முறித்து, அவர்களைச் சுகமாகப் படுத்துக்கொண்டிருக்கச்செய்வேன்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Job 5:23வெளியின் கற்களுடனும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; 1 வெளியின் மிருகங்களும் உம்முடன் சமாதானமாயிருக்கும். 1
Psalms 46:9அவர் பூமியின் கடைசிவரை யுத்தங்களை ஓயச்செய்கிறார்; 1 வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; 1 இரதங்களை + 46:9 கேடகங்களை மரத்தினாலும் தோலினாலும் செய்யப்பட்டதாயிருந்தது எரிந்து போக கூடியதாய் இருந்தது. நெருப்பினால் சுட்டெரிக்கிறார். 1
Isaiah 2:4அவர் தேசங்களிடையே நியாயந்தீர்த்து, திரளான மக்களின் வாக்குவாதங்களைத் தீர்த்துவைப்பார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் மாற்றுவார்கள்; நாட்டிற்கு விரோதமாக நாடு பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் போர்ப்பயிற்சி எடுப்பதுமில்லை.
Isaiah 2:17அப்பொழுது மனிதர்களின் மேட்டிமை தாழ்ந்து, மனிதர்களின் வீறாப்புத் தணியும்; யெகோவா ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.
Isaiah 26:1அக்காலத்திலே யூதாதேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு உண்டு; காப்பாற்றுதலையே அதற்கு மதிலும் பாதுகாப்புமாக ஏற்படுத்துவார்.
Isaiah 65:25ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி பாம்பிற்கு இரையாகும்; என் பரிசுத்த மலையெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடு உண்டாக்குவதுமில்லையென்று யெகோவா சொல்கிறார்.