Isaiah 17:13
மக்கள் கூட்டங்கள் திரளான தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைந்தாலும், அவர்களை அவர் அதட்டுவார்; அவர்கள் தூரமாக ஓடிப்போவார்கள்; மலைகளிலே காற்றினால் பறந்துபோகிற பதரைப்போலவும், சுழல்காற்றிலே அகப்பட்ட துரும்பைப்போலவும் துரத்தப்படுவார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Job 21:18அவர்கள் காற்றின் திசையிலிருக்கிற துரும்பைப்போலவும், 1 பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள். 1
Psalms 1:4துன்மார்க்கர்களோ அப்படியில்லாமல், 1 காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். 1
Psalms 35:5அவர்கள் காற்றடிக்கும் திசையில் பறக்கும் பதரைப்போல ஆவார்களாக; 1 யெகோவாவுடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக. 1
Psalms 65:8பூமியின் கடைசி இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களுக்காக பயப்படுகிறார்கள்; 1 காலையையும், மாலையையும் சந்தோஷப்படச்செய்கிறீர். 1
Psalms 83:14நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், 1 அக்கினி ஜூவாலைகள் மலைகளை எரிப்பது போலவும், 1
Isaiah 10:33இதோ, சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாக வெட்டுவார்; உயர்ந்து வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும்.