Isaiah 26:3
உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறதினால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Thou wilt keep him in perfect peace, whose mind is stayed on thee: because he trusteth in thee.
In Context
2சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள தேசம் உள்ளே நுழைவதற்காக வாசல்களைத் திறவுங்கள்.
4யெகோவாவை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நிலையான கன்மலையாயிருக்கிறார்.
Cross References
1 Chronicles 5:20அவர்களை எதிர்க்கத் தேவனுடைய உதவி பெற்றபடியால், ஆகாரியர்களும் இவர்களோடு இருக்கிற யாவரும் தோற்கடிக்கப்பட்டார்கள்; அவர்கள் யுத்தத்திலே தேவனை நோக்கிக் கூப்பிட்டு, அவர்மேல் நம்பிக்கை வைத்தபடியால் அவர்களுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.
2 Chronicles 16:8மிகவும் ஏராளமான இரதங்களும் குதிரை வீரருமுள்ள எத்தியோப்பியரும் லிபியரும் மகா சேனையாயிருந்தார்கள் அல்லவா? நீர் யெகோவாவைச் சார்ந்து கொண்டபோதோவெனில், அவர்களை உமது கையில் ஒப்புக்கொடுத்தாரே.
Psalms 85:7யெகோவாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, 1 உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும். 1
Isaiah 9:6நமக்காக ஒரு குழந்தை பிறந்தது; நமக்கு ஒரு மகன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் பெயர் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
Isaiah 32:17நீதியின் செயல் சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமைதலும் சுகமுமாம்.
Isaiah 48:2அவர்கள் தங்களைப் பரிசுத்த நகரத்தார் என்று சொல்லி, சேனைகளின் யெகோவா என்னும் நாமமுள்ள இஸ்ரவேலின் தேவன்மேல் பற்றுதலாக இருக்கிறார்கள்.