Isaiah 28:16
ஆதலால் யெகோவாவாகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது சோதனை செய்யப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறமாட்டான் + 28:16 பார்க்க சங்கீதம் 118:22-23, ரோமர் 9:33, 10:11, 1 பேதுரு. 2:6.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Genesis 49:24ஆனாலும், அவனுடைய வில் உறுதியாக நின்றது; அவனுடைய புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கைகளால் பலமடைந்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான்.
Psalms 112:7துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படமாட்டான்; 1 அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பித் திடனாயிருக்கும். 1
Isaiah 8:14அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் யூதா, இஸ்ரவேல், இரண்டு கோத்திரத்திற்கும் தடுக்கி விழச்செய்யும் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிமக்களுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார்.
Daniel 2:45இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவிற்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது உண்மை, அதின் அர்த்தம் சத்தியம் என்றான்.
Zechariah 3:9இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி, இந்த தேசத்தில் அக்கிரமத்தை ஒரே நாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
Matthew 21:42இயேசு அவர்களைப் பார்த்து: 1 வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே 1 மூலைக்குத் தலைக்கல்லானது, 1 அது கர்த்தராலே ஆனது, 1 அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று 1 நீங்கள் வேதத்தில் ஒருபோதும் வாசிக்கவில்லையா?