Isaiah 29:19
சிறுமையானவர்கள் யெகோவாவுக்குள் மிகவும் மகிழ்ந்து, மனிதர்களில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருவார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
20கொடியவன் அற்றுப்போவான், பரியாசக்காரன் இல்லாமற்போவான்.
Cross References
Psalms 12:5ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, 1 அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார். 1
Psalms 25:9சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, 1 சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். 1
Psalms 149:4யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்; 1 சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார். 1
Isaiah 14:30மிகவும் தரித்திரரின் தலைப் பிள்ளைகள் திருப்தியாகச் சாப்பிட்டு, எளியவர்கள் சுகமாகப் படுத்திருப்பார்கள்; உன் வேரைப் பஞ்சத்தினாலே சாகும்படிசெய்வேன், உன்னில் மீதியானவர்களை அவன் கொன்று போடுவான்.
Isaiah 41:16அவைகளைத் தூற்றுவாய், அப்பொழுது காற்று அவைகளைக் கொண்டுபோய், சுழல்காற்று அவைகளைப் பறக்கடிக்கும்; நீயோ யெகோவாவுக்குள்ளே களிகூர்ந்து, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள்ளே மேன்மைபாராட்டிக்கொண்டிருப்பாய்.
Isaiah 61:1கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கக் யெகோவா என்னை அபிஷேகம்செய்தார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டப்பட்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்,