ஏசாயா 31:6
இஸ்ரவேல் மக்களே, நீங்கள் முற்றிலும் விட்டுவிலகினவரிடத்தில் திரும்புங்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Turn ye unto him from whom the children of Israel have deeply revolted.
In Context
Cross References
2 Chronicles 36:14ஆசாரியர்களில் முக்கியமான அனைவரும் மற்றும் மக்களும் கூடி புறவகைகளுடைய சகல அருவருப்புகளின்படியும் மிகவும் துரோகம்செய்து, யெகோவா எருசலேமிலே பரிசுத்தம்செய்த அவருடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள். 1 எருசலேமின் வீழ்ச்சி
Isaiah 29:15தங்கள் ஆலோசனையைக் யெகோவாவுக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் செயல்களை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைப் பார்க்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார்? என்று சொல்கிறவர்களுக்கு ஐயோ,
Isaiah 55:7துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்புவானாக; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்புவானாக; அவர் மன்னிக்கிறதற்கு மிகுந்த தயையுள்ளவர்.
Jeremiah 3:12நீ போய் வடதிசையை நோக்கி சொல்லவேண்டிய வார்த்தைகள் என்னவென்றால்: சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உங்கள்மேல் என் கோபத்தை இறங்கச்செய்வதில்லை; நான் கிருபையுள்ளவரென்று யெகோவா சொல்லுகிறார்; நான் என்றைக்கும் கோபம் வைக்கமாட்டேன்.
Jeremiah 3:22ஒழுக்கம்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் ஒழுக்ககேடுகளைக் குணமாக்குவேன் என்றார். இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய யெகோவா.
Jeremiah 31:18நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய யெகோவா.