Isaiah 32:19
ஆனாலும் காடு அழிய கல்மழை பெய்யும், அந்த நகரம் மகா தாழ்வாய்த் தாழ்ந்துபோகும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
When it shall hail, coming down on the forest; and the city shall be low in a low place.
In Context
Cross References
Exodus 9:18எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்த நேரத்தில் பெய்யச்செய்வேன்.
Isaiah 10:33இதோ, சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாக வெட்டுவார்; உயர்ந்து வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும்.
Isaiah 24:10வெறுமையாய்ப்போன நகரம் தகர்ந்து, ஒருவரும் உள்ளே நுழையமுடியாதபடி, வீடுகளெல்லாம் அடைபட்டுக்கிடக்கும்.
Isaiah 26:5அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார்; உயர்ந்த நகரத்தையும் தாழ்த்துகிறார்; அவர் தரைவரை தாழ்த்தி அது மண்ணாகும்வரை இடியச்செய்வார்.
Isaiah 28:2இதோ, திறமையும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்; அவன் கல்மழையைப் போலவும், சங்காரப் புயல்போலவும், புரண்டுவருகிற பெருவெள்ளம்போலவும் வந்து, கையாலே அதைத் தரையில் தள்ளிவிடுவான்.
Isaiah 30:30யெகோவா மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கச்செய்து, கடுங்கோபத்தினாலும் அழிக்கிற நெருப்புத்தழலினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் வல்லமையைக் காண்பிப்பார்.