Isaiah 41:26
நாம் அதை அறியும்படியாக ஆரம்பத்தில் சொன்னவன் யார்? நாம் அவனை யதார்த்தவான் என்று சொல்லும்படி ஆரம்பகாலத்தில் அறிவித்தவன் யார்? அறிவிக்கிறவன் ஒருவனும் இல்லையே; உரைக்கிறவனும் இல்லையே; உங்கள் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறவனும் இல்லையே.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Isaiah 43:9சகல தேசங்களும் ஏகமாகச் சேர்ந்துகொண்டு, சகல மக்களும் கூடிவரட்டும்; இதை அறிவித்து, முந்தி சம்பவிப்பவைகளை நமக்குத் தெரிவிக்கிறவன் யார்? கேட்டு உண்மையென்று சொல்லக்கூடும்படிக்கு, அவர்கள் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவந்து நேர்மையானவர்களாக விளங்கட்டும்.
Isaiah 45:21நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாக யோசனைசெய்யுங்கள்; இதை ஆரம்பகாலமுதற்கொண்டு விளங்கச்செய்து, அந்நாள் துவங்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.