Isaiah 52:6
இதினிமித்தம், என் மக்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச் சொல்கிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று யெகோவா சொல்கிறார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Exodus 3:13அப்பொழுது மோசே தேவனை நோக்கி: “நான் இஸ்ரவேலர்களிடம் போய், உங்கள் முன்னோர்களுடைய தேவன் உங்களிடம் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன்” என்றான்.
Exodus 34:5யெகோவா ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, யெகோவாவுடைய நாமத்தைக் கூறினார்.
Psalms 48:10தேவனே, உமது பெயர் வெளிப்படுகிறதுபோல 1 உமது புகழ்ச்சியும் பூமியின் கடைசிவரையிலும் வெளிப்படுகிறது; 1 உமது வலதுகை நீதியால் நிறைந்திருக்கிறது. 1
Isaiah 42:9ஆரம்பகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்கிறேன். 1 யெகோவாவுக்குத் துதியின் பாடல்
Isaiah 60:16நீ தேசங்களின் பாலைக் குடித்து, ராஜாக்களின் முலைப்பாலையும் உண்டு, யெகோவாவாகிய நான் இரட்சகரென்றும், யாக்கோபின் வல்லவர் உன்னை விடுவிப்பவரென்றும் அறிந்துகொள்வாய்.
Ezekiel 20:44இஸ்ரவேல் மக்களே, உங்கள் பொல்லாத வழிகளுக்குத்தக்கதாகவும், உங்களுடைய கெட்ட செயல்களுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என்னுடைய பெயரினால் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள் என்கிறதைக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.